புதிய வீடு கட்டியுள்ள பிக்பாஸ் புகழ் அமீர்-பாவனி ரெட்டி ஜோடி... பிரபலம் வெளியிட்ட போட்டோ
பிக்பாஸ் 5
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாவனி ரெட்டி.
இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் ஹிட் சீரியல்கள் பலவும் நடித்துள்ளார். பிக்பாஸில் இவர் தனது முதல் திருமண சம்பவங்களை பகிர்ந்தபோது அனைவருமே அவருக்காக வருத்தப்பட்டார்கள்.
தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தை பகிர்ந்த பிக்பாஸ் பாவனிக்கு அதே நிகழ்ச்சி புதிய வாழ்க்கையையும் கொடுத்துள்ளது.
அதாவது அவர் அதே நிகழ்ச்சியில் பங்குபெற்ற அமீர் என்பவரை காதலித்து இந்த வருட 2025 ஆரம்பத்தில் கோலாகலமாக திருமணமும் செய்துகொண்டார்.

புதிய வீடு
பிக்பாஸில் ஆரம்பித்த காதல் வெளியே வந்த பிறகு Living In Relationshipல் இருந்தவர்கள் திருமணம் செய்து தங்களது வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் நடிகை பாவனி தனது இன்ஸ்டாவில் புதிய வீடு கட்டிக்கொண்டிருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் பாவனி-அமீர் ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    