தாலி கட்டுவதற்கு முன் முக்கிய நபருக்காக காத்திருந்த அமீர் - பாவனி.. யாருக்காக தெரியுமா
அமீர் - பாவனி திருமணம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை பாவனி, அங்கு அமீர் என்பவரை சந்தித்தார். முதலில் அமீர் தனது காதலை பாவனியிடம் கூறியினாலும், அதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை.
பின் பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளிவந்தபின், இருவரும் தங்களது காதலை உறுதி செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், நேற்று இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
பிரியங்கா தேஷ்பாண்டே தனது திருமணம் முடிந்த கையோடு, அமீர் - பாவனியின் திருமணத்திற்காக முன் நின்று பல விஷயங்களை செய்தார்.
காத்திருந்த அமீர் - பாவனி
இந்த நிலையில், தாலி கட்டுவதற்கு முன் அமீர் - பாவனி ஜோடி இருவரும் பிரியங்கா எங்கே என்று கேட்டுள்ளார்.
அவர் அப்போது மணமேடைக்கு அருகில் இல்லாத காரணத்தினால் இருவரும் காத்திருந்த நிலையில், பிரியங்கா வந்தபின் பாவனி கழுத்தில் தாலிகட்டினார் அமீர். இதுவும் மிகவும் நெகிழ்ச்சியான விஷயம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
