இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு! இத்தனை கோடியா
அமிதாப் பச்சன்
பாலிவுட் சினிமாவின் ஜாம்பவான் நடிகர் அமிதாப் பச்சன் தனது திரை வாழ்க்கையை 1969ல் துவங்கினார். இன்று வரை தொடர்ந்து 55 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
நேற்று வெளிவந்த வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் இன்று நடிகர் அமிதாப் பச்சனின் 82வது பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 3300 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மும்பையில் இருக்கும் அமிதாப் பச்சனின் பங்களா வீட்டின் மதிப்பு ரூ. 112 கோடி இருக்கும் என்கின்றனர். Kaun Banega Crorepati நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ஒரு எபிசோடிற்கு ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
ரூ. 3 கோடி மதிப்புள்ள Range Rover, ரூ. 3 முதல் ரூ. 4 கோடி மதிப்புள்ள Bentley, ரூ. 9 கோடி மதிப்புள்ள Rolls Royce உள்ளிட்ட பல விலைஉயர்ந்த கார்களையும் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ. 260 கோடி மதிப்புள்ள Private jet ஒன்றையும் வைத்துள்ளாராம்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
