10 வீடுகளை வாங்கிய அமிதாப், அபிஷேக் பச்சன்.. விலை இத்தனை கோடிகளா?
நடிகர் அமிதாப் பச்சன் 82 வயதிலும் படுபிஸியாக நடித்து வருகிறார். அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கும் நிலையில் சம்பளமும் கோடிக்கணக்கில் வருகிறது.
ரஜினி உடன் வேட்டையன் படத்தில் சமீபத்தில் நடித்து இருந்தார் அமிதாப்.
தான் சம்பாதிக்கும் பணத்தின் மூலமாக தொடர்ந்து சொகுசு கார்கள் மற்றும் வீடுகளை வாங்கி குவித்து வருகிறர் அமிதாப் பச்சன்.
10 வீடுகள்
இந்நிலையத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் ஆகியோர் பெயர்களில் சமீபத்தில் 10 அபார்ட்மெண்ட்கள் வாங்கப்பட்டு இருக்கிறது.
மும்பையில் Oberoi Realtyயின் Eternia என்ற அபார்ட்மெண்டில் தான் 10 வீடுகளை அமிதாப் மற்றும் அபிஷேக் வாங்கி இருக்கின்றனர். அதன் மொத்த விலை 24.95 கோடி ரூபாய்.
10 ஆயிரம் சதுர அடி பரப்பளவு, 20 கார் பார்க்கிங் இந்த வீடுகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்டாம்ப் டியூட்டி 1.5 கோடி மற்றும் பதிவு கட்டம் 3 லட்சஹ் ருபாய் ஆகியவை செலுத்தி சமீபத்தில் பதிவு நடைபெற்று இருக்கிறது.

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
