பல ஆயிரம் கோடி சொத்து வைத்திருக்கும் அமிதாப்.. மகளுக்கு மட்டும் கொடுத்த கிப்ட்!
நடிகர் அமிதாப் பச்சன் இந்திய சினிமாவில் மிக மூத்த நடிகர். இந்த வயதிலும் அவர் சினிமா, டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
அடுத்து ரஜினியின் 170வது படம், கமல் - பிரபாஸ் உடன் கல்கி 2898 AD ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
அமிதாப் பச்சனுக்கு பல ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது. மும்பையில் பல இடங்களில் வீடுகள், சொகுசு கார்கள், நிறுவனங்களில் முதலீடு என அவருக்கு சுமார் 3160 கோடி ருபாய் சொத்து இருக்கிறது.
மகளுக்கு வீடு கிப்ட்
அமிதாப் பச்சன் அவரது மகள் ஸ்வேதா நந்தாவுக்கு மும்பை ஜுஹு பகுதியில் இருக்கும் வீட்டை கிப்ட் ஆக கொடுத்துவிட்டாராம்.
அந்த வீட்டின் மதிப்பு சுமார் 50 கோடி ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மகளுக்கு Prateeksha என்ற அந்த வீட்டை எழுதி கொடுத்திருக்கிறார் அமிதாப். அதற்காக ரூ 50.65 லட்சம் ருபாய் பத்திரப்பதிவுக்காக செலுத்தி இருக்கிறார் அவர்.