32 வருடங்களுக்கு பிறகு சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் பாலிவுட் ஜாம்பவான்!
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதே நேரத்தில் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற ரோலில் நடித்து இருக்கிறார். அவரது லுக் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில் அதற்கு இணையத்தில் கலவையான ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
அடுத்து ரஜினி டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கிறார். அந்த படம் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

அமிதாப் பச்சன்
ரஜினி 170 படத்தில் அமிதாப் பட்சன் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன் ரஜினி - அமிதாப் இருவரும் 1991 வெளிவந்த ஹம் என்ற படத்தில் நடித்துஇருந்தனர். தற்போது 32 வருடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் நடிக்கிறார்கள்.
ரஜினி இந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். போலீஸ் போலி என்கவுண்டர்களை எதிர்க்கும் வகையில் தான் கதை இருக்கும் என கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஆகும் நடிகர் ஜீவா! வைரலாகும் அப்டேட்