வங்கி கணக்கில் மட்டும் ரூ.120 கோடி இருக்கு.. நகை, கார் என அமிதாப் பச்சன் மொத்த சொத்து விவரம்
நடிகர் அமிதாப் பச்சன் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக பல தசாப்தங்களாக இருந்து வருகிறார். தற்போது 81 வயதாகும் நிலையிலும் அவர் படங்கள், விளம்பரங்கள், டிவி ஷோக்கள் என பிசியாக நடித்து வருகிறார்.
அவரது மனைவி ஜெயா பச்சன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வரும் நிலையில், விரைவில் நடக்க இருக்கும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார். அதில் அவரது சொத்து விவரங்கள் மற்றும் கணவர் அமிதாப் பச்சனின் சொத்து விவரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு இருக்கிறார்.

சொத்து விவரம்
மொத்தம் 1578 கோடி ருபாய் சொத்து இருப்பதாக ஜெயா பச்சன் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் அசையும் சொத்து மொத்தம் 849.11 கோடி ரூபாய், அசையா சொத்து மொத்தம் 729.77 கோடி ரூபாய்.
அவரிடம் ரூ.1,63,56,190 மற்றும் கணவர் அமிதாப்பிடம் ரூ. 273,74,96,590 சொத்து இருக்கிறதாம். அமிதாப் பச்சன் வங்கி கணக்கில் மட்டுமே தற்போது 120 கோடி ருபாய் இருக்கிறது.
ஜெயா பச்சனிடம் 40.97 கோடிக்கு நகைகள், 9.82 லட்சத்திற்கு ஒரு கார் இருக்கிறது. அமிதாப் பச்சனிடம் 54.77 கோடிக்கு நகைகள் மற்றும் 17.66 கோடி ருபாய் மதிப்பில் மொத்தம் 16 கார்கள் இருக்கின்றன. அதில் மெர்சிடஸ், ரேஞ் ரோவர் உள்ளிட்ட பல கார்கள் அடக்கம்.
