சர்ச்சையில் சிக்கிய நடிகர் அமிதாப் பச்சன்.. உடனடியாக செய்த விஷயம்
பாலிவுட் திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் அபிதாப் பச்சன்.
இவர், சினிமாவில் நடித்து சம்பாதிப்பதற்கு இணையாக விளம்பரத்திலும் சம்பாதிக்கிறவர்.
அபிதப் பச்சன் நடிக்கும் சில விளம்பரங்கள் அவ்வப்போது சர்ச்சையையும் உருவாக்கும்.
அந்த வகையில் தற்போது பான்மசலா விளம்பரம் ஒன்றில் நடித்தார். அரசு அனுமதியுடன்தான் அந்த பான்மசாலா விற்கப்படுகிறது.
சிகரெட் விற்பனைக்கு அரசு அனுமதி இருந்தாலும் அதை ஊக்கப்படுத்தும் விளம்பரத்தில் யாரும் நடிப்பதில்லை.
அதேபோலத்தான் பான்மசாலா விளம்பரமும். பான்மசாலா விளம்பரத்துக்காக அமிதாப் பச்சனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் பான்மசலா விளம்பரத்தில் இருந்து விலகி விட்டாராம் அமிதாப். இந்த விளம்பரத்திற்காக வாங்கிய பெரும் தொகையையும் நடிகர் அமிதாப் திருப்பி கொடுத்துள்ளாராம்.

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
