டிவியில் இந்தியாவிலேயே அதிக சம்பளம்.. ஒரு எபிசோடுக்க் இவ்வளவா? சல்மான் கானை முந்திய அமிதாப்
சில நடிகர்கள் திரைப்படங்களில் நடித்து சம்பாதிக்கும் பணத்தை விட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதைவிட மிகப் பெரிய அளவில் சம்பாதிக்கிறார்கள். அதில் முக்கியமானவர் ஹிந்தி நடிகர் சல்மான் கான். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவர் பல நூறு கோடிகள் சம்பளமாக வாங்குகிறார்.
ஆனால் அவரையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு புது சாதனையை செய்திருக்கிறார் நடிகர் அமிதாப்பச்சன்.
KBC 17 சம்பளம்
கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 17வது சீசனை அமிதாபச்சன் அடுத்த தொகுத்து வழங்குகிறார். வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அமிதாப்பச்சன் ஒரு எபிசோடுக்கு ஐந்து கோடி ரூபாய் வாங்குகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் வாரத்திற்கு 25 கோடி ரூபாய் அவர் சம்பாதிக்கப் போகிறார்.
இதன் மூலம் சல்மான் கானை பின்னுக்குத் தள்ளி டிவியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் என்கிற பெயரை அமிதாப்பச்சன் தற்போது பெற்றிருக்கிறார்.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
