அமிதாப் பச்சனின் தம்பியை தெரியுமா.. இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?
நடிகர் அமிதாப் பச்சன் இந்திய சினிமாவில் பல தசாப்தங்களாக முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தற்போது 81 வயதாகும் நிலையிலும் அவர் பிஸியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அமிதாப் பச்சனுக்கு 3000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருக்கும் நிலையில் அதை மகன் அபிஷேக் மற்றும் ஸ்வேதா பச்சன் ஆகியோருக்கு பிரித்து கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு மகள் ஸ்வேதாவுக்கு தனது 50 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார். அதற்கான பத்திரப்பதிவும் நடந்து முடிந்திருக்கிறது.

அமிதாப் தம்பி
அமிதாப் பச்சனுக்கு ஒரு தம்பி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. அவரது பெயர் அஜிதாப் பச்சன். அஜிதாப் பச்சனும் கோடீஸ்வரர் தான்.
தொழிலதிபரான அவருக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்தில் பல்வேறு தொழில்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது நிறுவனங்களின் மதிப்பு 166 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமிதாப் தம்பியை பொது நிகழ்ச்சிகளில் அரிதாக தான் காணமுடியும். சமீபத்தில் அவர் The Archies பட பிரீமியரில் கலந்துகொண்டார். அந்த படத்தில் அமிதாப்பின் பேரன் அறிமுகமான நிலையில் ஒட்டு மொத்த குடும்பமும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan