அம்மன் படத்தில் வந்த குட்டி அம்மனை நியாபகம் இருக்கா?- திருமணம், குழந்தை என எப்படி உள்ளார் பாருங்க
அம்மன் படம்
சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு டிரண்ட் படங்கள் வரும்.
அப்படி 90களில் சாமி படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக மவுசு இருந்து வந்தது, சாமி படங்ககிளை பார்த்து பக்தி பரவசத்தில் தியேட்டரிலேயே ரசிகர்கள் சாமியாடியதும் உண்டு.
90ஸ் கிட்ஸ்களுக்கு சாமி படம் என்றாலே முதலில் நியாபகம் வருவது அம்மன் திரைப்படம் தான், அதேபோல் சாமி என்றால் ரம்யா கிருஷ்ணன் தான் என மக்கள் கொண்டாடினார்கள்.
1995ம் ஆண்டு வெளியான அம்மொரு படத்தில் தமிழ் ரீமேக் தான் அம்மன் திரைப்படம். ரூ. 2 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் கிராபிக்ஸுக்கு மட்டுமே ரூ. 80 லட்சம் செலவானதாம்.
குழந்தை நட்சத்திரம்
இதில் அம்மன் வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை போல குழந்தை அம்மனாக நடித்து ஒரு சிறுமி அசத்தியிருப்பார்.
அந்த குழந்தையின் பெயர் சுனைனா பாதம், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் அம்மன் படத்திற்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக 25 படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக 1996ம் ஆண்டு படம் நடித்தவர் அதன்பிறகு காணவில்லை. திருமணம் ஆகி குழந்தையும் உள்ள நிலையில் ஓ பேபி, வலிமை, வெப் சீரியசுகளில் இப்போது நடித்து வருகிறார்.