இது தான் எனது முதல் காதல் ! புகைப்படத்துடன் நடிகை அம்மு அபிராமி வெளியிட்ட பதிவு..
ராட்சசன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. அவரின் முதல் படத்திலே பெரியளவிலான ரசிகர்களை கவர்ந்தார்.
அதன் பிறகு அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்த கதாபாத்திரம் சிறந்த விமர்சனங்களை பெற்றது.
மேலும் தற்போது அவர் அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் யானை திரைப்படத்தில், அபிராமி அம்மு நடித்து வருவதாக இன்ஸ்டாராம் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் மகேந்திராவின் புதிய தார் ஜீப்பை வாங்கியுள்ளார். மேலும் தனது முதல் காருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு சின்ன கதை ஒன்றையும் கூறியுள்ளார்.
அதில் "சிறுவயதில் இந்த காரை முதல் முறை சாலை பார்த்ததாகவும், அப்போதே கார் வாங்கினால் இதை தான் வாங்க வேண்டும் என முடிவெடுத்தேன்" , "எனது முதல் காதல்" என கூறி நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.