திருமண கோலத்தில் பிகில் நடிகை அம்ரிதா ஐயர்! வைரல் புகைப்படங்கள்
அம்ரிதா ஐயர்
பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் அம்ரிதா ஐயர். அவர் விஜய் ட்ரெய்னிங் கொடுக்கும் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக இருப்பார். அவர் நடித்த தென்றல் கதாபாத்திரம் பிகில் பட ரிலீஸ் நேரத்தில் அதிகம் பேசப்பட்டது.
பிகில் படத்திற்க்கு பிறகு அம்ரிதா லிப்ட் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது அம்ரிதா தமிழ், தெலுங்கில் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் அமிர்தாவுக்கு அங்கு 1.9 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக அவர் தொடர்ந்து போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
திருமணம் முடிந்துவிட்டதா?
இந்நிலையில் அம்ரிதா திடீரென திருமண கோலத்தில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட, அவருக்கு நிஜத்தில் திருமணம் முடிந்துவிட்டதோ என அனைவரும் நினைத்துவிட்டனர்.
"No no it’s not my marriage pictures!!" என அவரே அதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அது உண்மையில் வணக்கம்டா மாப்ள என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஸ்டில் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.