எதிர்நீச்சல் சீரியலில் ஏற்பட்ட மரணம்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
எதிர்நீச்சல்
சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் 2. இந்த சீரியலில் தற்போது பல எதிர்ப்புகளை தாண்டி தங்களது Food Truck பிஸினஸை ஜனனி மற்றும் பெண்கள் நடத்தி வருகிறார்கள்.

பல வகைகளில் இந்த தொழிலை தடுத்து நிறுத்த ஆதி குணசேகரன் முயற்சி செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் தனது தம்பிகள் இருவரையும் அனுப்பி இந்த தொழிலை நிறுத்த நினைத்தார். ஆனால், ஜனனி எதற்கும் அசராமல், பல தடைகளை தாண்டி Food Truck பிஸினஸை நடத்தி வருகிறார்.
மரணம்
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விஷயத்தை செய்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் ஆதி குணசேகரன். தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோவில், அமுதாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என கூறுகிறார்கள்.
பின், அந்த பெண் வேறு எங்கேயும் செல்லவில்லை, வீட்டிலிருந்து நேராக இங்குதான் வந்துள்ளார் என போலீஸ் கூறுகிறார்கள். இதனை தொடர்ந்து, ஜனனி மீது சந்தேகம் வருகிறது என போலீஸ் கூற, மொட்டைமாடியில் உள்ள பெரிய கவரை திறக்கிறார்கள். அதை பார்த்தவுடன் ஜனனி அதிர்ச்சி கத்துகிறார். அமுதா இறந்துவிட்டார் என கூறுகின்றனர்.

ஜனனி மற்றும் பெண்களில் தொழிலை முடக்க இப்படியொரு விஷயத்தை ஆதி குணசேகரன் செய்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இனி, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.