அழகிய காட்சிகளுடன் முடிவுக்கு வந்த ஜீ தமிழின் ஹிட் சீரியல்- எப்படி முடிந்தது பாருங்க
ஜீ தமிழ்
சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இதில் நடனம், பாடல், விளையாட்டு போட்டிகள் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.
அதேசமயம் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் நிறைய சப்போர்ட் மக்களிடம் கிடைத்துள்ளது.
அடுத்தடுத்து தொடர்ந்து அண்ணா, சீதா ராமன், நல தமயந்தி, மாரி, அமுதாவும் அன்னலட்சுமியும் என ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகிறது.
கடைசி காட்சி
இந்த நிலையில் தான் ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. கண்மணி மனோகரன் முக்கிய நாயகியாக நடிக்க ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் 470 எபிசோடுடன் முடிவுக்கு வந்துள்ளது.
தொடர் முடிவுக்கு வந்தது ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும் அழகிய காட்சிகளுடன் தொடர் முடிய ரசிகர்கள் சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதோ தொடரின் கடைசி காட்சி,