மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் எமி ஜாக்சன்.. மகன்கள் குறித்து எமோஷ்னல்
எமி ஜாக்சன்
தமிழில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். பின் தாண்டவம், தெறி, ஐ, 2.0 ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மிஷன் சாப்டர் 1 படத்தில் ஆக்ஷன் நாயகியாக மிரட்டியிருந்தார்.
நடிகை எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பு ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின், இவர்கள் பிரிந்த நிலையில், Ed Westwick என்ற ஹாலிவுட் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த எமி ஜாக்சன் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
எமோஷ்னல்
இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு எமோஷ்னல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், " சுமார் ஒரு ஆண்டுக்கு பின் மகனை பிரிந்து முதல்முறையாக வேலைக்கு செல்வது மிகவும் கடினமாக உள்ளது.
எப்போது வீடு திருப்பி எனது மகன்களை பார்க்க போகிறேன் என்ற ஏக்கம் உள்ளது. இந்த பிரிவு, கஷ்டம் அனைத்தும் என் மகன்களுக்கு தான் என்பதை நினைக்கும்போது சற்று ஆறுதலாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.