இரண்டாவது முறையாக நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது.. குடும்பத்துடன் வெளியிட்ட போட்டோ
எமி ஜாக்சன்
தமிழ் சினிமாவில் களமிறங்கிய ஹாலிவுட் நடிகை தான் எமி ஜாக்சன்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமா பக்கம் வந்தவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என நடித்து வந்தவர் இப்போது இந்திய சினிமா பக்கம் காணவில்லை.
கர்ப்பம்
ஹாலிவுட் பட நடிகர் எட் வெஸ்ட்விகின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த எமி ஜாக்சனுக்கு இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தனது மகனுக்கும் ஆஸ்கார் அலெக்சாண்டர் என பெயர் வைத்துள்ளார்.
எட் வெஸ்ட்விகின் முன்பு எமி ஜாக்சன் ஆண்ட்ரூஸ் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் செய்தார், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தவர் ஆண் குழந்தையும் பெற்றார். அதன்பின் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.

மோடி இல்லாமல் 150 இடங்களில் கூட வெல்ல முடியாது - விவாதமாகும் எம்.பி. நிஷிகாந்த் துபேவின் பேச்சு! IBC Tamilnadu

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
