மீண்டும் எமி ஜாக்சன்.. தமிழில் முக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகிறார்
எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சன் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவான மதராசபட்டினம் படத்தில் ஹீரோயினாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதற்கு பிறகு தமிழ், ஹிந்தி சினிமாவில் சில படங்களை நடித்தார் அவர்.
அதற்கு பிறகு அவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே பாய் பிரென்ட் உடன் குழந்தை பெற்று கொண்டார். ஆனால் அதற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவர் பாய்பிரென்டிடம் இருந்து பிரிந்து தற்போது புது காதலர் உடன் இருந்து வருகிறார்.
மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி
இந்நிலையில் தற்போது எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஏ.எல் விஜய்யின் அடுத்த படத்தில் தான் ஹீரோயினாக நடிக்கிறாராம்.
அருண் விஜய் தான் அந்த படத்தில் ஹீரோ, அதனால் இந்த புது காம்போ எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. எமி ஜாக்சன் அந்த படத்தில் நடிப்பது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகர் படுதோல்வி! மொத்தம் இத்தனை கோடி நஷ்டமாhttps://cineulagam.com/article/liger-boxoffice-huge-loss-1661944718