சூர்யாவுடன் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் முக்கிய நடிகர்..! இணைந்த பிளாக் பஸ்டர் கூட்டணி..
நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா 40 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் பூஜை முக்கிய நட்சத்திரங்கள் உடன் அண்மையில் நடந்தது, கொரோனா பாதிப்பில் இருந்து சமீபத்தில் மீண்டுள்ள சூர்யா இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார், அதுமட்டுமின்றி சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சூர்யா 40 படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு முன் நந்தா திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் ராஜ்கிரண் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.