அனகோண்டா திரை விமர்சனம்
அனகோண்டா படம் என்றாலே திரில்லர் நிறைந்து எட்ஜ் ஆப் தி சீட் இருக்கும். ஆனால், முதன் முறையாக அனகோண்டா வைத்து ஒரு செம காமெடி பாடம் இயக்குனர் டாம் முயற்சி செய்துள்ளார், அது க்ளிக் ஆனதா? பார்ப்போம்
கதைக்களம்
டக், க்ளிப் மற்றும் சிலர் நண்பர்கள், சிறு வயதிலிருந்தே சினிமா மோகத்தில் இருப்பவர்கள். இதில் டக் இயக்குனர் ஆக வேண்டும், க்ளிப் நடிகராக வேண்டும் என போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் க்ளிப்-க்கு 30 வருடம் முன்பு வந்த அனகோண்டா படத்தின் ரைட்ஸ் கிடைக்கிறது. இதை வைத்து அந்த படத்தை ரீபூட் செய்யலாம் என முடிவு செய்கின்றனர்.
இதனால் அமேசான் காட்டிற்குள் தங்கள் நண்பர்கள் மற்றும் மேலும் இருவருடன் அனகோண்டா படம் எடுக்க செல்கின்றனர்.
அப்படி செல்லும் போது உண்மையாவே மிக பிரமாண்டமான அனகோண்டா வர, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
அனகோண்டா படம் என்றாலே செம பரபரப்பு திக் திக் நிமிடங்கள் இருக்கும், ஆனால், இந்த அனகோண்டா-வில் சவுண்ட் எபெக்ட்ஸில் மட்டும் தான் பயம் வருகிறதே தவறி காமெடி கலாட்டா செய்துள்ளனர் இந்த குழு.
அதிலும் டக் ஆக வரும் ஜாக் ப்ளாக், க்ளிப் ஆக வரும் பவுல் இருவரும் டைமிங்கில் செம Fun செய்துள்ளனர், அதிலும் ஜாக் ப்ளாக் இறந்துவிட்டதாக நினைது அவரை வைத்து ஒரு கலாட்டா செய்துள்ளார்கள் பாருங்க சிரிப்பு சரவெடி தான்.
அதே நேரத்தில் சாண்டிகோ, தண்டியா நியூட்டன், பிறகு ஒரு கும்பலிடமிருந்து தப்பித்து வரும் பெண் என சில கேரக்டர்களும் ஆங்காங்கே ஸ்கோர் செய்கின்றனர்.
ஆனால், இந்த படத்தின் பலம் காமெடி என்பது போல் பலவீனமும் இது தான், நாம் இது வரை பார்த்த அனகோண்டா படம் அனைத்தும் ஒரு பதட்டம் இருக்கும்.
இதில் அந்த பதட்டம் இல்லை, ஒவ்வொருத்தரும் அனகோண்டா-விடம் மாட்டி கொள்ளும் போது பரிதாபம் வராமல் எல்லோரும் சிரித்து பார்ப்பது இந்த ஜானாரில் காமெடி தேவையா என்ற நிலை உருவாகியுள்ளது.
டெக்னிக்கலாக படத்தின் சிஜி ஒர்க்ஸ் சூப்பர், இருந்தாலும் பழைய அனகோண்டா-வில் வந்த அந்த ரப்பர் பாம்பு அளவிற்கு கூட இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, இசை பிரமாதம்.
க்ளாப்ஸ்
ஜாக் ப்ளாக், பவுல் காமெடி கவுண்டர்ஸ்.
ஒரு சில அனகோண்டா சீக்குவன்ஸ்.
பல்ப்ஸ்
அனகோண்டா கதையை இந்த ஜானரில் சொல்ல வேண்டும் என தேர்ந்தெடுத்ததே பெரிய மைன்ஸ்.
மொத்தத்தில் எந்த பதட்டமின்றி வெறும் டைம் பாஸ் வாட்ச் ஆக செல்கிறது இந்த அனகோண்டா.
2.5/5