தோத்துகிட்டே இருக்கியேடா.. வைரலாகும் AI வீடியோக்கள் பற்றி ஆனந்த்ராஜ் வைத்த வேண்டுகோள்
ஏஐ எனப்படும் Artificial intelligence தளங்கள் பிரபலமான பிறகு சமூக வலைத்தளங்களில் அதன் மூலம் உருவாக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோகள் தான் ஆதிக்கம் வைரல் ஆகி வருகின்றன
இணையத்தில் நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகிறது. பல நடிகைகளின் போட்டோக்கள் ஏஐ மூலம் மாற்றப்பட்டு வைரல் ஆவது பற்றி அடிக்கடி சர்ச்சை எழுகிறது. பல நடிகைகளும் இதற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தோத்துகிட்டே இருக்கியேடா..
சமீபத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் இருப்பது போன்ற 'தோத்துகிட்டே இருக்கியேடா..' வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அது பற்றி ஆனந்த்ராஜ் அளித்த பேட்டியில், "அதை யார் செய்து இருந்தாலும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ட்ரெண்ட் ஆவது நல்லது. ஆனால் அதே நேரத்தில் கொஞ்சம் காயப்படுத்தாமல் இருந்தால் சந்தோசம்" என கூறி இருக்கிறார்.