'ஆனந்தம் விளையாடும் வீடு' திரைவிமர்சனம்
கதைக்களம்
ஜோ மல்லூரிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு சரவணன், விக்னேஷ், சினேகன், என நான்கு மகன்கள். சரவணனுக்கு கவுதம் கார்த்திக், வெண்பா என இரண்டு பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு சேரன், செல்லா, சவுந்தரராஜா ஆகியோர் மகன்கள். சேரன் தனது அண்ணன் சரவணன் மீது அதிக பாசமாக இருக்கிறார்.
சரவணன் தனது மகள் வெண்பாவின் குழந்தை தங்கள் வீட்டில்தான் பிறக்க வேண்டும் என நினைக்கிறார். வீடு கட்டுவதற்காக அண்ணன் சரவணனுக்கு தனக்கு சொந்தமான வீட்டு மனையை கொடுக்கிறார் சேரன். இதற்கு சரவணன், வீட்டு மனை உன்னுடையது, வீடு கட்டும் செலவு என்னுடையது என்று சேரனிடம் கூறி முடிவு செய்து மொத்த குடும்பமும் ஒன்றாக வாழ முடிவு செய்கிறார்கள்.
இந்த வீட்டை கட்டுவதற்கு குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் வருகிறது. இறுதியில் பிரச்சனைகளை சமாளித்து அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தார்களா? வீட்டை கட்டினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அண்ணன், தம்பி பாசத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி. குடும்பத்தின் பாசப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். பல காட்சிகள் சீரியல் போல் உள்ளது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
அனைவருக்கும் ஓரளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். கவுதம் கார்த்திக், சேரன், சரவணன் ஆகிய மூவரின் நடிப்பும் சிறந்த ஒன்று. முழு கதையும் தாங்கி சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக சேரனின் நடிப்பு படத்திற்கு பலம். கவுதம் கார்த்திக் ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
தம்பியாக நடித்திருக்கும் சவுந்தரராஜா கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கமான தன்னுடைய ஸ்டைலில் வில்லத்தனம் செய்திருக்கிறார் டேனியல் பாலாஜி. மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். ஆனால், சிலரின் நடிப்பு செயற்கையாகவும் இருந்தது.
சித்துகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக சொந்தமுள்ள வாழ்க்கை என்ற பாடல் உணர்ச்சி பூர்வமாக உள்ளது. பாலபரணியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை எதார்த்தமாய் பதிவு செய்துள்ளது. நந்தா பெரியசாமி இயக்கம் சூப்பர் என்றாலும், படத்தில் ஆனந்தம் சற்று குறைவு தான்.
க்ளாப்ஸ்
கவுதம் கார்த்திக், சேரன், சரவணன் நடிப்பு
உணர்ச்சி பூர்வமான காட்சிகள்
ஒளிப்பதிவு
பல்ப்ஸ்
சீரியல் போல் இருக்கும் சில காட்சிகளை தவிக்கமுடியவில்லை
சேரன், சரவணனை தவிர்த்து சிலரின் நடிப்பு செயற்கையாக இருந்தது
மொத்தத்தில் ஆனந்தத்தில் சற்று குறைவுடன் ' ஆனந்தம் விளையாடும் வீடு '
2.75 / 5

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
