தாலி கட்டிய அன்பு, அடுத்து நடந்த மிகப்பெரிய அதிர்ச்சி.. சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ
சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
ஆனந்தி கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என அன்பு மற்றும் அவரது நண்பர்கள் திட்டம் போட்ட நிலையில், அது அவர்களுக்கு வெற்றியில் முடிந்திருக்கிறது.
துணைப்பெண், துணை மாப்பிள்ளை என சொல்லி அருகில் அமரவைத்துவிட்டு இறுதியில் அன்பு தனது கழுத்தில் தாலி கட்டியதை பார்த்து ஆனந்தி கடும் அதிர்ச்சி ஆகிறார்.
அன்பு அம்மா கொடுத்த ஷாக்
எல்லோரும் உன்னை ஏற்றுக்கொள்வார்கள், நான் வாக்கு கொடுக்கிறேன் என அன்பு எல்லோர் முன்னிலையில் ஆனந்தியிடம் கூறுகிறார்.
ஆனால் அன்புவின் அம்மா அந்த நேரத்தில் குறுக்கிட்டு ஒரு அதிர்ச்சி விஷயத்தை சொல்கிறார். ஆனந்தி தாலியை கழற்றி தூக்கி எரியும்படி சொல்கிறார். ஆனந்தியும் அந்த முடிவை தான் எடுப்பாரா? பொறுத்திருந்து இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
