நீண்ட இடைவேளைக்கு பிறகு சீரியலில் நடிக்க வந்த நடிகை ஆனந்தி- விஜய்யில் எந்த தொடர் தெரியுமா?
சின்னத்திரையில் நிறைய பிரபலங்கள் வருகின்றனர், போகின்றனர். சில் மட்டுமே தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள்.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6ல் கலந்துகொண்டு மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை ஆனந்தி.
அதன்பிறகு நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். பின்னர் குழந்தை பிறந்த பிறகு சில பேட்டிகள் கொடுத்த அவர் தினமும் இன்ஸ்டா பக்கத்தில் ஏதாவது ஒரு புகைப்படத்தை பதிவு செய்த வண்ணம் இருந்தார்.
தற்போது அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு கேமரா பக்கம் வந்துள்ளார். அதாவது விஜய்யில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் அவர் மற்ற பிரபலங்களுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.