மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தற்போது தெரியவந்துவிட்டதால், இனி என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார் அவர்.
அவர் சாக்கடையில் விழுந்த நிலையில் அவர் உயிரை மகேஷ் தான் காப்பாற்றுகிறார். ஹாஸ்பிடலில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்து அதன் பின் ஹாஸ்டலில் கொண்டு வந்து விடுகிறார் மகேஷ். அதன் பிறகு மகேஷ் அன்புவிடமும் இதுபற்றி சொல்லி எச்சரித்துவிட்டு போகிறார்.
இன்றைய எபிசோடு ப்ரோமோ
இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஆனந்தியின் பெற்றோர் அவரை பார்க்க ஊரில் இருந்து கிளம்புகிறார்கள். மேலும் ஆனந்தி தனது கையில் இருக்கும் ஸ்கேன் ரிப்போர்ட்டை கிழித்து போடுகிறார்.
அதை கிழித்து வில்லி மித்ரா ரூம் குப்பைத்தொட்டியில் தான் அவர் போடுகிறார். அதை விழியின் ரூம் மேட்ஸ் உள்ளே கொண்டு சென்று வைக்கிறார்கள். அதன் மூலமாக தான் ஆனந்தியின் கர்ப்பம் ஊருக்கே தெரியவரும் என எதிர்பார்க்கலாம். ப்ரோமோவை பாருங்க.