வெளியேற்றப்படும் ஆனந்தி.. காத்திருக்கும் பெரிய ஷாக்! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பத்துக்கு யார் காரணம் என தேடும் முயற்சியில் இருக்கிறார். இந்த நிலையில் ஆனந்தியை விட்டுவிட்டு போக மாட்டேன் என உறுதியாக இருக்கிறார் அன்பு.
அதனால் அன்புவின் அம்மா மற்றும் வில்லி துளசி செம கடுப்பில் இருக்கிறார்கள். ஆனந்தி அட்டைப்பூச்சி போல அன்பு உடன் ஒட்டிக்கொண்டிருக்குக்ம் நிலையில் அவளை நெருப்பை காட்டி எப்படி துரத்துகிறேன் பாரு என சொல்லி துளசி ஒரு விஷயம் செய்கிறார்.
அடுத்த வார ப்ரோமோ
துளசி நேராக மகேஷின் அம்மாவை சந்தித்து ஆனந்தி பற்றி சொல்லி தூண்டிவிடுகிறார். அவர் நேராக கம்பெனிக்கு வந்து 'ஆனந்தி போல் ஒழுக்கம் கெட்டவளுக்கு இங்கே இடம் இல்லை, வெளியே போக சொல்லுங்க' என கூறுகிறார்.
அதனால் கருணாகரன் அவரை துரத்துகிறார். அடுத்த வார ப்ரோமோவில் நீங்களே பாருங்க.