மோசமான கேள்வி கேட்ட நபருக்கு விஜய் பெயரை சொல்லி பதிலடி கொடுத்த விஜய் டிவி நடிகை
விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாப்புலர் ஆனவர் ஆனந்தி. அவர் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நெகடிவ் ரோல்களில் அதிகம் நடித்து வருகிறார்.
கோவையை சேர்ந்த அவர் திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு தற்போது ஒரு மகனும் இருக்கிறார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அவர் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பலரும் பல விதமான கேள்விகள் கேட்டனர். ஆனால் ஒரு நபர் மிகவும் மோசமாக 'உங்களுக்கு முத்தம் கொடுக்க ஆசை' என குறிப்பிட்டு இருந்தார்.
அதற்கு பதில் கொடுத்த ஆனந்தி "நானும் தளபதி விஜய் போஸ்டருக்கு பல முறை முத்தம் கொடுத்திருக்கிறேன். நீயும் follow பண்ணு" என குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனந்தி மிக தீவிர விஜய் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
