விஜய்யுடன் நடிக்க வேண்டும்.. 25 வயது நடிகையின் ஆசை
விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
இதை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனன்யா பாண்டே
பாலிவுட் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் அனன்யா பாண்டே. இவர் பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள் ஆவார்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரை வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் யாருடன் நடிக்க விருப்பம் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகை அனன்யா பாண்டே "நடிகர் விஜய்யுடன் நடிக்க விருப்பம்" என கூறியுள்ளார்.