அன்பே சிவம் ஹீரோயின் நீக்கம்.. குண்டானது தான் கரணமா? புது நடிகை இவர்தான்
கொரோனா கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால் மக்களுக்கு பொழுதுபோக்கு விஷயமாக சின்னத்திரை தான் இருந்து வருகிறது. அதிலும் சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ரக்ஷா ஹோல்லா தற்போது ஜீ தமிழின் அன்பே சிவம் தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார். அவர் இந்த தொடர் மூலமாக கடந்த வருடம் ரீஎன்ட்ரி கொடுத்த நிலையில் தற்போது அதில் இருந்து திடீரென நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருகிறது.
ரக்ஷாவின் உடல் எடை கூடியது தான் இந்த முடிவுக்கு காரணம் என்றும் தகவல் பரவி வருகிறது. மேலும் இனி அன்பு ரோலில் கவிதா கௌடா என்ற புது நடிகை நடிக்க போகிறார் என்றும் செய்தி வந்திருக்கிறது.