வில்லன் பெரியப்பாவுக்கு பெரிய ஷாக்.. கயல் லேட்டஸ்ட் ப்ரோமோ இதோ
கயல் சீரியலில் தற்போது தம்பி அன்புவை காப்பாற்ற முடியாது என எல்லோர் முன்பும் கூறிவிடுகிறார். ஆனாலும் அதன் பின் அன்புவை போதை பொருள் விஷயத்தில் சிக்க வைத்த டேனியல் வீட்டுக்கே சென்று சண்டை போடுகிறார்.
கயல் அவனை கோபத்தில் அடித்துவிடுகிறார். அதற்காகவே உன் தம்பியை போலீசில் சிக்க வைப்பேன் என சொல்லி விடுகிறார் டேனியல். கயல் அவன் காலில் விழுந்தாலும் பயனில்லை. அதன் பின் போலீஸ் கயல் வீட்டுக்கு வந்து அன்புவை கைது செய்து கூட்டி செல்கின்றனர்.
அதை பார்த்து வில்லன் பெரியப்பா மற்றும் அவர் மனைவி கொண்டாடுகின்றனர். அதன் பின் அவனை போலீஸ் அடித்து உதைப்பதை பார்த்தும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ப்ரோமோ
இந்நிலையில் நாளைய ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அன்புவை போலீஸ் ஸ்டேஷனில் சந்தித்து பேசும் பெரியப்பா, கயலுக்கு எதிராக அவனை திருப்ப முயற்சிக்கிறார்.
ஆனால் அந்த திட்டம் வீங்கிப்போகிறது. அன்பு ரிலீஸ் ஆகி விட்டதாக தகவல் கேட்டு பெரியப்பா தர்மலிங்கள் ஷாக் ஆகிறார். அன்பு ரிலீஸ் ஆனது எப்படி என்பதை நாளைய எபிசோடில் தான் பார்க்க வேண்டும்.