அன்புடன் குஷி சீரியலில் ரேஷ்மாவிற்கு பதிலாக நடிக்க வந்த பிரபல சீரியல் நடிகரின் காதலி- யாரு தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் 10க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன.
அதில் ஒரு சீரியல் என்றால் அன்புடன் குஷி. கடந்த வருடத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த சீரியல் ஓரளவிற்கு மக்களிடம் வரவேற்பு பெற்றது.
பின் கொரோனா வரவே சீரியல் நாயகி மாற்றப்பட்டார். புதிதாக ரேஷ்மா என்பவர் நடித்து வந்தார், சீரியல் நன்றாக போய்க் கொண்டிருக்க திடீரென அவர் சீரியலில் இருந்து விலகுவதாக கூறினார்.
இந்த நிலையில் அன்புடன் குஷி சீரியலில் ரேஷ்மாவிற்கு பதிலாக ஸ்ரேயா என்கிற சீரியல் நடிகை நடிக்கவுள்ளாராம். அவர் திருமணம் என்கிற சீரியல் மூலம் பிரபலம் ஆனவர்.
அதுமட்டும் இல்லாமல் ராஜா ராணி 2 சீரியலில் நாயகனாக நடிக்கும் சித்துவின் காதலியும் ஆவார்.
சீரியலில் ஸ்ரேயா நடிக்கும் போது எடுக்கப்பட்ட படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.