கடுமையான ஜிம் ஒர்க்அவுட் வீடியோவை முதன்முதலாக வெளியிட்ட தொகுப்பாளினி அஞ்சனா- செம வீடியோ
தமிழ் சினிமாவில் கியூட்டான தொகுப்பாளினிகள் அதிகம் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் தொகுப்பாளினி அஞ்சனா.
பாடல் தொலைக்காட்சியில் 10 வருடத்திற்கு மேலாக டாப் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். காரணம் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் எல்லாமே படு சூப்பர் டூப்பர் ஹிட்.
டாப்பில் இருந்தபோதே கயல் படத்தின் நாயகன் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதன்பின் தொலைக்காட்சி பக்கம் வருவார் என்று பார்த்தால் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துக் கொண்டு வந்த அஞ்சனா பின் தொலைக்காட்சி பக்கம் வந்தார். தொகுப்பாளினி பணியை மீண்டும் செய்ய தொடங்கியுள்ளார்.
அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்கள் கவர்வார். அண்மையில் ரசிகர்களுடன் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவில் சாட் செய்தார்.