பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியலில் நடிக்க வந்த தொகுப்பாளினி அர்ச்சனா - வெளியான வீடியோ
முன்னணி சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த இரண்டு சீரியல்களும் TRPயில் பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்த இரண்டு சிரியல்களும் தற்போது மகா சங்கமத்திற்காக இணைந்து ஒரு மணி நேரமாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு சீரியல்களின் மகா சங்கமத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற, பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா நடித்து வருகிறார்.
ஆம் இந்த சீரியலில் இடம்பெறும் முக்கிய காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக நடித்துள்ளார் அர்ச்சனா.
மேலும் பிக் பாஸ் முடிந்த பிறகு, தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளும், அர்ச்சனா சீரியல்களிலும் வந்துகொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.