என் கணவர் அதற்காக எப்போதும் காத்திருப்பார்- 10 வருடங்களுக்கு மேலான திருமண வாழ்க்கை குறித்து தொகுப்பாளினி பாவனா
பாவனா
ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி விஜய் டிவி பக்கம் வந்து பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர் பாவனா.
முதல்முதலில் ராஜ் டிவியில் பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கியுள்ளார். விஜய்யில் சூப்பர் சிங்கர் ஜுனியர், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடன நிகழ்ச்சி தொகுத்து வழங்கி மிகவும் பிரபலம் ஆனார்.
அப்படியே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஐபிஎல், உலகக் கோப்பை டி20, நியூசிலாந்துக்கு எதிரான தொடர், கால்பந்து, கபடி, கைப்பந்து போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

கணவர் பற்றி பிரபலம்
சமீபத்தில் தொகுப்பாளினி பாவனா தனது கணவர் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர், எங்களுக்கு திருமணம் நடந்து 10 வருடம் ஆகிவிட்டது, வெளியே எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் நேரம் கிடைப்பது இல்லை.

அப்படியே போக வேண்டும் என்றாலும் அடுத்த மாதம் என்ன பண்ண போறீங்க என முன்னாடியே கேட்பார், அவர் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்வார். நாங்கள் சந்திக்கும் நாளுக்காக அவர் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு காத்துக் கொண்டிருப்பார்.
எனக்கு திடீரென பெரிய வேலை வரும், அதை ஒதுக்கி வைக்கவும் முடியாது, ஆனால் அவர் அதை புரிந்துகொண்டு இயல்பாக நடப்பார். அவர் என் மீது பொசசிவ் தான், இருந்தாலும் ரொம்ப பொசசிவ் எல்லாம் கிடையாது.
காதல் வாழ்க்கைக்கு பொசசிவ் ரொம்ப முக்கியம் தான், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வது ஒரு தனி சுகம் என்று கூறியிருக்கிறார்.

இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம் News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri