திடீரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்த கூறிய தொகுப்பாளினி டிடி... குவியும் லைக்ஸ்
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி என்று கேட்டால் உடனே ரசிகர்கள் டிடி என்று தான் கூறுவார்கள்.
இளம் வயதிலேயே தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கியவர் டிரெண்டிற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி இப்போதும் இளம் தொகுப்பாளினிகளுக்கு டப் கொடுத்து வருகிறார்.

இடையில் காலில் ஏற்பட்ட தவறான ஆபரேஷனால் அதிகம் டிவி பக்கம் வராமல் இருந்தார். ஆனாலும் கால் பிரச்சனையால் வீட்டிலேயே முடங்காமல் விதவிதமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, பெரிய நடிகர்களின் நிகழ்ச்சிகள் நடத்துவது என பிஸியாக தான் இருக்கிறார்.
ரோஹினி பற்றிய உண்மை தெரிந்ததும் விஜயா இல்லை, மனோஜ் செய்த ஷாக்கிங் விஷயம்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட்
அடிக்கடி போட்டோ ஷுட் புகைப்படங்கள், வெளிநாடு செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

திருமணம்
இந்த நிலையில் திடீரென திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். யாருக்கு திருமணம் என்றால் அவரது சகோதரர் தர்ஷனுக்காம்.
அஜர் என்ற வெளிநாட்டு பெண்ணுடன் அவரது சகோதரருக்கு திருமணம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை ஷேர் செய்து தனது சகோதரருக்கு வாழ்த்து கூற பதிவு செய்துள்ளார்.