தொகுப்பாளினி டிடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல்
தொகுப்பாளினி டிடி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கலக்கி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
1999ம் ஆண்டு பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.
விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் வெர்சஸ் கேல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து சூப்பராக தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு பெரிய பீக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது காஃபி வித் டிடி தான்.
சின்னத்திரை, வெள்ளித்திரை என கொடிகட்டி பறந்த நடிகை டிடி இப்போது அவ்வளவாக தொலைக்காட்சி பக்கம் வராதது மட்டுமே ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக உள்ளது.
சொத்து மதிப்பு
டிடி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ. 4 லட்சம் வரை சம்பளம் பெறுவதாகவும், இவரின் சொத்து மதிப்பு ரூ. 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் சினிமாவை தாண்டி தனியாகவும் சொந்த தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
