தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா - முழு விவரம் இதோ
தனது 14 வயதில் இருந்து சின்னத்திரையில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் திவ்யதர்ஷினி. இவருக்கு டிடி என்கிற செல்ல பெயரும் உண்டு.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'உங்கள் தீர்ப்பு' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.
இதன்பின், விஜய் டிவியில் தொடர்ந்து பல நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வந்த டிடி-க்கு, காப்பி வித் டிடி எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சி தான் டிடி-க்கு மிகப்பெரிய பெயரை சின்னத்திரையில் ஏற்படுத்தி தந்தது.
இந்நிலையில் தொகுப்பாளினி டிடி ஒரு நிகழ்ச்சிக்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 3 லட்சம் சம்பளமாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வாங்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.