துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க
டிடி
சின்னத்திரையில் 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்லை. சொல்லப்போனால் பல ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி பைனல் போட்டியில்தான் தலைகாட்டினார்.
உடல்நலம் கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்தியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா, அரசு விழாக்களை மட்டுமே அவ்வப்போது தொகுத்து வழங்கி வருகிறார்.
மேக்கப்
இன்ஸ்டாகிராமில் 2.8 மில்லியன் பாலோவர்களை கொண்டு டிடி, அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார்.
இந்த நிலையில், தற்போது துளி கூட மேக்கப் போடாமல் டிடி வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில், "மேக்கப் இல்லாம, சுருக்கங்கள், வெள்ளை முடி, கண்ணாடியுடன் இருக்கேன், இதுக்கு இன்னும் லைக்குகள் கிடைக்குமா?" என குறிப்பிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்: