அட புதிய Toyota கார் வாங்கிய பிரபல தொகுப்பாளினி டிடி.... வீடியோவுடன் இதோ
தொகுப்பாளினி டிடி
அழகு, பேச்சுத் திறமை, மற்றவர்களை சிரித்த முகத்துடன் அணுகும் முறை என ஒரு தொகுப்பாளினியாக தமிழ் சின்னத்திரை மக்களின் மனதை வென்றவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
பள்ளியில் படிக்கும் போதே தொகுப்பாளினியாக களமிறங்கியவர் ரெக்கை கட்டிய மனசு என்ற சீரியல் மூலம் நடிகையாக களமிறங்கியவர் தொடர்ந்து படங்களிலும் நடித்து வந்தார்.
விஜய் டிவியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், இவரது எல்லா ஷோக்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த 2014ம் ஆண்டு தனது நீண்டநாள் நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஆனால் 3 வருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்.

புதிய கார்
இடையில் டிடிக்கு காலில் பிரச்சனை ஏற்பட சிகிச்சை செய்தவருக்கு சிகிச்சை தவறாக அமைந்துவிட்டது. அதனால் மற்றொரு சிகிச்சை செய்ய அதுவும் சரியாக வரவில்லை, இப்படி காலில் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டிலேயே முடங்கினார்.

ஆனாலும் டிடி புதுவிதமான நிகழ்ச்சிகளை நடத்திய வண்ணம் இருந்தார். தற்போது தொகுப்பாளினி டிடி புதிய Lanson Toyota காரை வாங்கியுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan