இன்று பிறந்தநாள் கொண்டாடும் தொகுப்பாளர் கோபிநாத்தின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா?
நீயா நானா
விஜய் டிவியில் கடந்த 2006ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய ஒரு ஷோ நீயா நானா.
இந்நிகழ்ச்சி ஒரு தலைப்பிற்கு இரு கருத்துக்களை கொண்டவர்களை வைத்து விவாதிக்கும் ஒரு தரமான நிகழ்ச்சியாகும். நாட்டில் நடக்கும் முக்கிய விஷயங்கள், வீடு, அலுவலகம் என பிற பொதுவானவற்றைப் பற்றி விவாதிக்கும் ஒரு மேடையாக உள்ளது.
விஜய் டிவி என்றாலே நீயா நானா என கூறும் அளவிற்கு செம ஹிட் ஷோ. விஜய் டிவியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
சொத்து மதிப்பு
நீயா நானா நிகழ்ச்சிக்கு பெயர் வந்ததற்கு ஒரு காரணம் தரமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோபிநாத்தால் என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை அறிந்து தரமாக பேசுவார். இன்று கோபிநாத் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார், அவருக்கு வாழ்த்து கூறி விஜய் டிவி பதிவு போட்டுள்ளனர்.
அவரது சொத்து மதிப்பு விவரமும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
நீயா நானா, சொந்தமாக யூடியூப், தனியார் நிகழ்ச்சிகள், பிரபலங்களை பேட்டி எடுப்பது என பிஸியாக உழைக்கும் கோபிநாத்தின் சொத்து மதிப்பு ரூ. 7 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.