அச்சச்சோ அது நடந்தால் மெண்டல் ஆகிடுவேன், எனக்கு செட் ஆகாது... மாகாபா ஆனந்த் ஓபன் டாக்

Yathrika
in தொலைக்காட்சிReport this article
மாகாபா ஆனந்த்
அட நம்ம மாகாபா ஆனந்தா அப்போது அந்த நிகழ்ச்சியை பார்க்கலாம் என கண்ணை மூடிக்கொண்டு மக்கள் அவர் மீது உள்ள நம்பிக்கையில் பார்ப்பார்கள்.
இவரது கலகலப்பான மற்றும் காமெடி கலந்து பேச்சு அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சிறப்பாக இருக்கும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி இசை வெளியீட்டு விழா, இசைக் கச்சேரி எனவும் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ்
விரைவில் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 8வது சீசன் தொடங்க உள்ளது, அதற்கான புரொமோக்களும் வெளியாகிவிட்டன.
பிக்பாஸில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் என வலம் வரும் லிஸ்டில் இந்த முறையும் தொகுப்பாளர் மாகாபா பெயர் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, பல ஆண்டுகளாக இதை சொல்கிறார்கள், ஆனால் நான் பங்கேற்க மாட்டேன்.
பிக்பாஸ் செட் வழியாக வேண்டுமானால் போவேன், நான் ஏற்கெனவே அரை மெண்டல், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனால் மெண்டலாகிவிடுவேன்.
பிக்பாஸ் போனால் கண்டிப்பாக அங்கிருக்கும் கேமராக்களை எல்லாம் அடித்து உடைத்திடுவேன் என தெரிவித்துள்ளார்.