தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ
தொகுப்பாளர் மாகாபா
விஜய் டிவியின் அடையாள தொகுப்பாளர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த். இவர் கடந்த 10 ஆண்டுகளாக விஜய் டிவியில் பணிபுரிந்து வருகிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து பல சீசன்களை தொகுத்து வழங்கி வந்தார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து அது இது எது, Mr. And Mrs. சின்னத்திரை, தி வால், முரட்டு சிங்கிள், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல விஜய் டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி மக்களை மகிழ வைத்துள்ளார்.
சம்பளம்
சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருது விழாவில் கூட, பிரைட் ஆப் தி சேனல் எனும் விருதை தட்டி சென்றார் மாகாபா.
இந்நிலையில், தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் ஒரு நாள் தொகுத்து வழங்கும் எபிசோடிற்கு ரூ. 1 லட்சம் சம்பளமாக வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.