12 ஆண்டுகள் நிறைவு, தொகுப்பாளினியாக மணிமேகலை இத்தனை ஷோக்கள் நடத்தியுள்ளாரா?- அவரே வெளியிட்ட வீடியோ
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கி தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் மணிமேகலை.
அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி பின் விஜய் டிவிக்கு வந்த மணிமேகலை நிறைய ஷோக்களில் பங்குபெறுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது என இருந்தார்.
இவரது வேலையை தாண்டி மணிமேகலை திருமணம் மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது. ஹுசைன் என்பவரை மணிமேகலை காதலித்து வர வீட்டில் சம்மதிக்காததால் திடீரென பதிவு திருமணம் செய்து புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.
இப்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் மணிமேகலை ஒரு சூப்பரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அது என்னவென்றால் அது சின்னத்திரையில் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டதாம்.
இதுவரை எத்தனை ஷோக்கள் நடத்தினேன், தனியாக எத்தனை நிகழ்ச்சிகள் செய்தேன் என்ற முழு விவரத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.