புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்தை சிம்பிளாக நடத்தி முடித்துள்ள தொகுப்பாளினி மணிமேகலை- வாழ்த்து மழையில் பிரபலம்
மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் மணிமேகலை.
போன் செய்து பேசும் மக்களிடம் மிகவும் கலகலப்பாக பேசி நிகழ்ச்சியை ரசிக்க வைப்பார். தொடர்ந்து அந்த தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் இடையில் திருமணம் செய்துகொண்டு விஜய் டிவி பக்கம் வந்தார்.
அவரது திருமண கதை குறித்து அவரே பல பேட்டிகளில் கூறியதால் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். விஜய் டிவி பக்கம் வந்தவர் கணவருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, தொகுப்பாளினியாக கலக்குவது என பிஸியாக இருந்தார்.
அவருக்கு மிகவும் கைகொடுத்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான், தற்போது புதியதாக தொடங்கவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்க இருக்கிறார் மணிமேகலை.
கனவு இல்லம்
மணிமேகலை தனது சொந்த கிராமத்தில் கொஞ்சம் இடத்தை வாங்கி அதில் தான் வீடு கட்டிக்கொண்டு இருப்பதாக அடிக்கடி ரசிகர்களிடம் அறிவிப்பார்.
இந்த நிலையில் தனது இடத்தில் புதியதாக கட்டி இருக்கும் வீட்டின் கிரகப்பிரவேசத்தை முடித்திருக்கிறார்.
தன்னுடைய வீடு பிரம்மாண்டமாக இருந்தாலும் அது பக்கத்தில் இது பார்ம் ஹவுஸ் ஆனால் இதுதான் நாங்கள் முதலில் கட்டிய வீடு என்று Farm House கிரகப்பிரவேசத்தை எளிமையாக முடித்து இருக்கிறார்.