விஜய் டிவியின் இந்த சீரியலில் வரப்போகிறாரா 90ஸ் பேவரெட் பெப்சி உமா- எந்த தொடர் தெரியுமா?
பெப்ஸி உமா
பொதிகையில் தனது சினிமா பயணத்தை தொடங்கி அதில் கிடைத்த பிரபலம் அப்படியே சன் தொலைக்காட்சிக்கு வந்தவர் பெப்ஸி உமா. பெப்ஸி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒரு பிரபலம்.
அந்நிகழ்ச்சியின் மூலம் படு பிரபலமான பெப்ஸி உமாவை நாயகியாக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள், ஏன் ரஜினி கூட தனது படம் ஒன்றில் நாயகியாக நடிக்க பெப்ஸி உமாவை கேட்டிருக்கிறார்.
ஆனால் அவர் சினிமாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று அந்த நிகழ்ச்சியோடு காணாமல் போனார்.
சீரியலில் பிரபலம்
விஜய் தொலைக்காட்சியில் முடிவுக்கு வரப்போவதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கூறுகின்றனர். ஜீவா தனது மாமனாரால் அவமானப்படுத்தப்பட கண்ணனும் தனது அண்ணனை நினைத்து வருத்தப்படுகிறார்.
விரைவில் அவர்கள் ஒன்று சேர சீரியலை முடிப்பார்கள் என கூறப்படுகிறது.
இடையில் கண்ணன்-ஐஸ்வர்யா வைத்திருக்கும் யூடியூப் சேனலுக்கான ஒரு காட்சிக்காக பெப்ஸி உமா சீரியலில் நடிக்கப்போகிறார் என்கின்றனர், ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த தொலைக்காட்சி பிரபலம் யார் தெரிகிறதா?- அட இவர்தானா