தனது கணவருக்கு பிறந்தநாள், ஸ்பெஷல் பதிவு போட்ட தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே...
பிரியங்கா
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தலைக்காட்டி வந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை காட்டி கடுமையாக உழைத்து இப்போது கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
இப்போது விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊஊ சொல்றியா போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடைசியாக விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியையும் கலக்கலாக தொகுத்து வழங்கி இருந்தார்.
பதிவு
தனது கெரியரில் ஜெயித்துள்ள தொகுப்பாளினி பிரியங்காவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பிரியங்கா தேஷ்பாண்டே திடீரென தனது திருமண போட்டோவை வெளியிட எல்லோரும் இன்ப அதிர்ச்சி ஆனார்கள்.
திருமணத்திற்கு பிறகும் பிஸியாக தொகுப்பாளினி வேலையை செய்து வரும் பிரியங்கா இன்று ஒரு பிறந்தநாள் பதிவு போட்டுள்ளார். அதாவது அவரின் கணவருக்கு தான் பிறந்தநாளாம், அதற்கு அவர் ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளார்.