தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள தொகுப்பாளினி பிரியங்கா- அவரே வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ
தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பு ஜீ தமிழில் திஸ் சிற்பி கேர்ள், அழகிய பெண்ணே, இசை அன்பிளக்ட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
அதன்பின் சுட்டி டிவியில் டாடி மை ஹீரோ, சன் மியூசிக்கில் மாமிஸ் டே அவுட், சன் டிவியில் சூரிய வணக்கம் என பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார்.
விஜய் டிவிக்கு சினிமா காரன் காப்பி நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்தவர் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் ஜுனியர், கிச்சன் சூப்பர் ஸ்டார், கிங்ஸ் ஆப் டான்ஸ், கனெக்ஷன், அச்சம் தவிர், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் 6, 7, 8, 9, ஸ்டார்ட் மியூசிக் என அவர் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிறந்தநாள்
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று (ஏப்ரல் 28) தனது 32வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அமீர் ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனால் அவர்களுடன் தான் பிரியங்கா பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.
ஆனால் பிரியங்கா தனது இன்ஸ்டாவில் பிறந்தநாள் வாழ்த்து கூறி ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டுள்ளார், அதில் அவரை தாண்டி யாரும் இல்லை. எனவே அமீர் வெளியிட்டது பழைய வீடியோ என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.
எது எப்படியோ 32வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள தொகுப்பாளினி பிரியங்காவிற்கு வாழ்த்துக்கள்.

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ஆளுநர் ரவிக்கு மூக்குடைப்பு; ராஜ்பவனை விட்டு வெளியேறுக - அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளிப்பு IBC Tamilnadu

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri
