நீங்கள் கேட்ட பாடல் புகழ் விஜய் சாரதி இந்த பிரபல நடிகரின் மகனா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

By Yathrika May 27, 2022 04:00 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளர் விஜய் சாரதி. இவர் சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

அந்த ஷோவிற்கு எப்படிபட்ட வரவேற்பு இருந்தது, விஜய் சாரதிக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் எல்லாம் எவ்வளவு இருந்தார்கள் என அனைத்து விவரமும் 90களின் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தற்போது அவர் இலங்கையில்  வசித்து வருகிறார். 

விஜய் சாரதியின் சோகமான பதிவு

விஜய் சாரதி பற்றிய விவரங்கள் அதிகம் யூடியூப் பக்கங்களில் வலம் வருகிறது, அதில் சில உண்மையும் இருக்கும் தவறான செய்தியும் இருக்கும். அண்மையில் அவரது அம்மா-அப்பா இறப்பு குறித்து தவறான செய்திகள் வந்ததாம். 

அதற்காக அவரே ஒரு வீடியோவில் தனது அம்மா-அப்பா பற்றியும், அவர்களது இறப்பு குறித்தும் பேசியுள்ளார்.

மறைந்த நடிகர் சசிகுமாரின் மகன் தான் நான். என் அம்மா-அப்பா 1974ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி வீட்டில் நடந்த தீ விபத்தில் இறந்தார்கள். அப்போது நான் மற்றும் எனது அக்கா இருவரும் சிறுவர்கள். எங்களை எனது அம்மாவின் அம்மா அதாவது என் பாட்டி தான் வளர்த்தார்கள். 

சில தவறான தகவல்கள் எனது அம்மா-அப்பா குறித்து வருகிறது, அப்படி செய்யாதீர்கள் என ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.

அதோடு தனது பெற்றோரின் இறப்பு பற்றியும் ஒரு சோகமான பதிவை அவர் போட்டுள்ளார்.

டான் திரைப்படம் 14 நாட்களில் செய்த முழு வசூல்- மொத்தம் இத்தனை கோடி வசூலா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US