அந்தகன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
அந்தகன்
டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் அந்தகன். பாலிவுட் திரையுலகில் வெளிவந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.

இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, கார்த்திக் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறை என இப்படத்தின் மீது பெரிதும் இல்லை என்பதே பெரும்பான்மையான விமர்சனங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
வசூல் விவரம்
இந்த நிலையில், அந்தகன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 85 லட்சம் வசூல் செய்துள்ளது. குறிப்பாக மாலை மற்றும் இரவு காட்சிகளில் இப்படத்திற்கு சிறந்த புக்கிங் வரவேற்பு கிடைத்துள்ளது.

அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri