மீண்டும் அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. காத்திருந்த ரசிகர்களுக்கு செம ட்ரீட்
அந்தகன்
டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் நடிகரும், இயக்குனரான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அந்தகன். இந்தியில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.
இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், கார்த்திக், வனிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இறுதியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்தகன் படம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்றை தளபதி விஜய்யை வைத்து வெளியிட்டு இருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இப்படம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலீஸ் தேதியில் மாற்றம்
இந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்தகன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது அந்த ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆம், அந்தகன் படம் ஆகஸ்ட் 15அல்ல, அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஆகஸ்ட் 9ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது என அறிவித்துள்ளனர்.
இது அந்தகன் படத்தை திரையில் காண வேண்டும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.